வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்

0
200

வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார், சென்னையில் காலமானார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘பைரவ தீபம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார். தமிழ் சினிமாவிலும் நடித்துள்ள இவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சமீபத்தில் காயமடைந்தார்.

அதற்காகச் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் தீக் ஷிதா, பத்மினி ஆகிய மகள்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here