Home சினிமா செய்திகள் மலையாள இயக்குநருடன் கைகோக்கும் விக்ரம்?

மலையாள இயக்குநருடன் கைகோக்கும் விக்ரம்?

0

மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படத்தை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 4 படங்கள் நடிப்பதற்கு கதைகள் கேட்டு முடிவு செய்திருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதில் ஒரு படத்தை ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அந்தப் படத்துக்கு முன்னதாக போடி ராஜ்குமார் படத்தை முடித்துவிட்டு ஜிதின் லால் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் விக்ரம்.

போடி ராஜ்குமார், ஜிதின் லால் மற்றும் ஆனந்த் ஷங்கர் என வரிசையாக இடைவெளியின்றி தொடர்ந்து நடிக்க விக்ரம் முடிவு செய்திருக்கிறார். இதில் ஆனந்த் ஷங்கர் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள படமான ‘ஏஆர்எம்’ படத்தின் இயக்குநர்தான் ஜிதின் லால். இதன் தமிழ்ப் பதிப்புக்கு அறிமுக குரல் பின்னணிக் கொடுத்தவர் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version