திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இந்த படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள் சுற்றுலா சென்று வருவதும் வழக்கம்.
இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்ததாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், உதய்பூர் நகரில் இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு தகுந்த வகையில் நடிகை ராஷ்மிகா, உதய்பூரில் நட்சத்திர விடுதிகள் சிலவற்றை பார்வையிட்டுள்ளார். இதை வட இந்திய ஊடக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. தங்கள் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக இருவரும் திட்டமிட்டு வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.














