விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரவுடி ஜனார்த்தனா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக்களமாகக் கொண்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த உடலுடன் வெளியாகியுள்ள விஜய் தேவரகொண்டா தோற்றம் மிரட்டலாக இருக்கிறது.

