குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் முதல் நிகழ்ச்சி: பிரதமர் மோடியின் உரை குறித்த 4 புத்தகங்கள் வெளியீடு

0
34

 குடியரசுத் துணைத் தலை​வ​ராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்​சி​யாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் உரை குறித்த புத்தக வெளீ​யீட்டு விழா​வில் நேற்று கலந்து கொண்​டார். குடியரசு துணைத் தலை​வர்​களாக இருந்த எம்​.வெங்​கையா நாயுடு மற்​றும் ஜெகதீப் தன்​கர் ஆகியோரும் தங்​களது பதவிக்​காலத்​தில் பிரதமர் மோடி குறித்த புத்​தகங்​களை வெளி​யிட்​டுள்​ளனர்.

மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகம் டெல்​லி​யில் நேற்று ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி உரை தொடர்​பான புத்​தகங்​களை குடியரசு துணைத் தலை​வர் ராதாகிருஷ்ணன் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தியா மீது 50% வரி விதித்​தா​லும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்​பர் என பாராட்டி வரு​கிறார்.

அதேபோன்​று​தான், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் சர்​வ​தேச அரசி​யலில் கருத்து வேறு​பாடு​கள் இருப்​பினும் மோடியை நல்ல நண்​ப​ராக ஏற்​றுக் கொண்​டுள்​ளார். அவர் சிறந்த சர்​வ​தேச ராஜதந்​திர​வா​தி. அத​னால்​தான் பிரதமர் மோடி சாத்​தி​யமற்​றதை சாத்​தி​ய​மாக்கி வரு​கிறார்.

எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் மனித குலத்​துக்கு சேவை செய்ய உங்​கள் இதயத்​தில் விருப்​பம் இருந்​தால், தானாகவே நீங்​கள் ஒரு வழியை கண்​டறிவீர்​கள். உலகளா​விய சக்​தி​யாக நாம் மாறு​வதற்​கான விருப்​பம் ஆதிக்​கம் செலுத்த அல்ல. உலகளா​விய நலனுக்​காக. பிரதமரின் உரைகளைப் படிக்​கும்​போது, பிரச்​சினை​களுக்​கான அணுகு​முறை, எண்​ணங்​களைப் பற்​றிய ஆழமான புரிதல் மற்​றும் மக்​களின் உணர்​வு​களை ஒரு சிறந்த தலை​வ​ரால் எவ்​வாறு புறக்​கணிக்க முடி​யாது என்​பதை நீங்​கள் புரிந்து கொள்வீர்கள்.

அது​தான் பிரதமர் மோடி​யின் முதன்​மை​யான முன்​னுரிமை. அரசின் நலத்​திட்​டங்​கள் சமூகத்​தின் கடைசி நபரை சென்றடைவதை உறுதி செய்​வதே அவரது விருப்​பம். தேசத்​தின் வளர்ச்​சி​யில் பிரதமரின் பங்​களிப்பு மற்​றும் கனவு​களைப் புரிந்​து​கொள்​வதற்கு இந்த புத்​தகங்​கள் முக்​கி​யம். இவ்​வாறு ராதாகிருஷ்ணன் பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here