Home சினிமா செய்திகள் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்!

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்!

0

சென்னை: வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விடுதலை 2 சிக்கல் என்ன? – படத்தின் தற்போதைய நீளமே 4 மணி நேரத்துக்கும் கூடுதலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரையரங்குக்கு 2:30 மணி நேர படமாக கொடுத்துவிட்டு, முழுமையான படத்தினை ஓடிடி வெளியீட்டுக்கு கொடுத்துவிடலாம் என்றும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ரயில் கவிழும் காட்சியினை காட்சிப்படுத்திய இடத்திலேயே, 2-ம் பாகத்துக்கு ஒரு கிராமத்தை செட்டாக அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்பார்த்தை பட்ஜெட்டை விட செலவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version