‘வெஞ்சென்ஸ்’ படத்​தில் கற்பனை மாநிலத்​தில் நடக்கும் அரசி​யல் கதை

0
17

அறி​முக இயக்​குநர் ராகுல் அசோக் இயக்​கி​யுள்ள படம் ‘வெஞ்சென்ஸ்’. இதில் அபர்​ண​தி, சச்​சு, ஒய்​.ஜி.மகேந்​தி​ரா, ஜான் விஜய், இளவரசு, காளி வெங்​கட் உள்பட பலர் நடித்துள்​ளனர். எம்​.எஸ்​.பிரபு ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். கார்த்திக் ராஜா, அருண் ராஜ் இசை அமைத்​துள்​ளனர்.

இப்​படம் பற்றி இயக்​குநர் ராகுல் அசோக் கூறும்​போது, “நான் யாரிட​மும் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றாமல் குறும்​படம் இயக்​கிய அனுபவத்​தின் மூலம் இதை இயக்கி இருக்​கிறேன். இது வேணி என்​கிற ஒரு பெண்​ணின் கதை. அவருடைய இயல்​பான வாழ்க்கை ஓர் இடத்​தில் ஆரம்​பித்து எங்கு போய் நிற்​கிறது என்​பது​தான் படம். இது 2002-ல் நடக்​கும் அரசி​யல் கதை. கற்​பனைக் கதை​தான்.

இங்கு இருக்​கிற சம்​பவங்​களு​டன் தொடர்பு வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காக, கற்​பனை​யான ஒரு மாநிலத்​தில் நடக்​கும் கதை​யாக உரு​வாக்கி இருக்​கிறோம். வேணி என்ற கதா​பாத்​திரத்​துக்கு அபர்​ணதி மிக​வும் சரி​யாகப் பொருந்தி இருக்கிறார். அவருடைய நடிப்பு பேசப்​படும்.

படத்​தில் வரு​கிற ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் கதை​யில் முக்​கி​யத்​து​வம் இருக்​கும். இதன் படப்​பிடிப்பு முடிவடைந்​து​விட்​டது. மார்ச் மாதம் வெளி​யிடத் திட்டமிட்டுள்​ளோம். கண்​டிப்​பாக அனை​வரும் ரசிக்கும்படியான படமாக இருக்​கும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here