வேளிமலை: வனச்சரகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி

0
225

குமரி மாவட்ட வனத்துறை சார்பில் வேளிமலை வனச்சரக பணியாளர்களும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் சேர்ந்து வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச 1-ம் தேதி) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. 

பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடிப் பாட்டில்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு, கடற்கரை ஒட்டிய மணல் பகுதியில் இருந்ததை முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்புறப்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்கள் கணபதிபுரம் பேரூராட்சி தலைவரின் அனுமதியின் பேரில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here