ஒருநாள் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ-யிடம் பல்வேறு அணிகள் வலியுறுத்தல்

0
13

இந்​திய அணிக்கு நடப்​பாண்​டில் ஏற்​கெனவே போட்​டிகள் நிறைந்த கால அட்​ட​வணை உள்​ளது. இந்நிலை​யில் வரும் 2027-ம் ஆண்டு தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற உள்ள ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்​பைக்கு முன்​ன​தாக, இருதரப்பு தொடர்களில் கூடு​தல் ஒரு​நாள் போட்​டிகளை சேர்க்குமாறு பல்​வேறு கிரிக்​கெட் வாரி​யங்​கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்​துள்​ளன.

இந்த வகை​யில் இந்​திய அணி வெளி​நாடு​களுக்​குச் சுற்றுப்​பயணம் மேற்​கொள்​ளும்​போது இருதரப்பு ஒரு​நாள் போட்​டிகளின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கு​மாறு இங்​கிலாந்​து, நியூஸிலாந்​து, அயர்​லாந்து மற்​றும் இலங்கை கிரிக்​கெட் வாரி​யங்​கள் பிசிசிஐ-​யிடம் கோரிக்கை வைத்துள்​ளன.

இந்த கோரிக்​கையை பிசிசிஐ பரிசீலித்து வரு​கிறது. இதனால் இந்​திய அணி​யின் போட்டி அட்​ட​வணை இன்​னும் தீவிரமாக மாறக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்​தக் கூடு​தல் போட்​டிகள் அந்​தந்த கிரிக்​கெட் வாரி​யங்​களுக்கு நிதி ரீதி​யாகப் பெரிதும் உதவக்​கூடும். ஏனெனில் இந்​தியா சம்​பந்​தப்​பட்ட போட்​டிகள் பொது​வாக அதிக ரசிகர்​கள் கூட்​டத்​தை​யும், வலு​வான தொலைக்​காட்​சிப் பார்​வை​யாளர்​களை​யும் ஈர்க்​கும் தன்​மை​யுடைய​வை.

பொது​வாக சர்​வ​தேச டி 20 போட்​டிகள் குறுகிய நேரத்​தைக் கொண்​டிருப்​ப​தா​லும், அதிக ரசிகர்​களை ஈர்ப்​ப​தா​லும் அவை​தான் மிகப்​பெரிய வரு​வாய் ஈட்​டு​பவை​யாகக் கருதப்​படு​கின்​றன. ஆனால், இந்​திய அணி விளை​யாடும்​போது நிலைமை சற்று வேறாக இருக்​கிறது. இந்​திய கிரிக்​கெட்​டின் இரு பெரும் நட்​சத்​திரங்​களான விராட் கோலி மற்​றும் ரோஹித் சர்மா இப்​போது ஒரு​நாள் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாடு​கிறார்​கள்.

அவர்​களது புகழின் காரண​மாக, இந்​தியா பங்​கேற்​கும் ஒரு​நாள் போட்​டிகள் இப்​போதும் உலகம் முழு​வதும் உள்ள ரசிகர்​களிடையே மிகப்​பெரிய ஆர்​வத்​தைத் தூண்​டும் வகை​யிலேயே உள்​ளது. அயர்​லாந்து கிரிக்​கெட் வாரி​யம் இந்த கோடை காலத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக மூன்று போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் போட்டித் தொடரை நடத்த முயற்சி செய்து வரு​கிறது.

இந்​திய அணி இங்​கிலாந்​தில் மேற்​கொள்​ளும் வெள்​ளைப்​பந்து தொடருக்​கான சுற்​றுப்​பயணத்​தின் போது அயர்​லாந்து சென்று விளை​யாட வாய்ப்​புள்​ளது. இருப்​பினும், இந்​தப் போட்​டிகள் ஒரு​நாள் போட்​டியா அல்​லது டி20 போட்​டியா என்​பது இன்​னும் தெளி​வாகத் தெரிய​வில்​லை. இங்கிலாந்​துக்கு எதி​ராக இந்​திய அணி 3 ஒரு​நாள் போட்​டிகள் மற்​றும் 5 டி20 போட்​டிகளில் விளை​யாட திட்​ட​மிட்​டுள்​ளது. இந்​தத் திட்​டத்​தில் மாற்​றங்​கள் ஏற்பட வாய்ப்பு உள்​ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் நீண்​ட​காலப் பயணத்​தில் அவர்​கள் இங்​கிலாந்​தில் விளை​யாடும் கடைசித் தருணங்​களில் ஒன்​றாக இது இருக்​கலாம். இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் கூடு​தலாக இரண்டு ஒரு​நாள் போட்​டிகளைச் சேர்ப்​பதா அல்​லது சில டி20 போட்​டிகளுக்​குப் பதிலாக ஒரு​நாள் போட்​டிகளை நடத்​து​வதா என்று அதி​காரி​கள் ஆலோ​சித்து வருகின்​றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்​திய அணி இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறது. இந்த பயணத்​தில் ஒரு​நாள் போட்​டிகளை சேர்க்​கு​மாறு இலங்கை கிரிக்​கெட் வாரி​யம், பிசிசிஐ-​யிடம் கோரிக்கை விடுத்​துள்​ளது. தற்​போதுள்ள திட்​டத்​தின்​படி, இலங்கை சுற்​றுப்​பயணத்​தில் இந்​திய அணி 2 டெஸ்ட் போட்​டிகளில் மட்​டுமே விளை​யாடு​கிறது.

இந்த ஆண்​டின் இறு​தி​யில் வங்​கதேசத்​தில் நடை​பெற வேண்​டிய தொடர் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில், ஆப்​கானிஸ்​தானுக்கு எதி​ராக நடை​பெற வேண்​டிய தொடர்​கள் குறித்து இன்​னும் நிச்​சயமற்ற சூழலே நில​வு​கிறது. இதன் காரண​மாக, அந்த இடைவெளி​யில் கூடு​தல் போட்​டிகளில் விளை​யாட இந்​தியா தயா​ராக இருக்​கலாம்.

சமீபத்​தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக இந்​திய அணி சொந்த மண்​ணில் நியூஸிலாந்​துக்கு எதி​ராக ஒரு​நாள் போட்​டித் தொடரை இழந்​திருந்​தது. இதனால் ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு தயா​ராகும் விதத்​தில் இந்​திய அணி கூடு​தல் போட்​டிகளில் பங்​கேற் ப​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

இந்​திய அணி நடப்​பாண்டை நியூஸிலாந்​தில் ஒரு முழு​மை​யான சுற்​றுப்​பயணத்​துடன் நிறைவு செய்​யத் திட்​ட​மிட்​டுள்​ளது. ஆறு ஆண்​டு​களுக்​குப் பிறகு நியூஸிலாந்து செல்ல உள்ள இந்​திய அணி 2 டெஸ்ட் போட்​டிகள், 3 ஒரு​நாள் போட்​டிகள், 5 டி20 போட்​டிகள் கொண்ட தொடர்​களில் விளை​யாடு​கிறது.

இருப்​பினும் இந்​தத் பயணத்​தில் கூடு​தலாக இரண்டு ஒரு​நாள் போட்​டிகளைச் சேர்க்​கு​மாறு நியூஸிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்​துள்​ளது; இது இந்​திய அணிக்கு இந்​தச் சுற்​றுப்​பயணத்​தை இன்​னும்​ நீண்​ட​தாக​வும்​, அதி​க வேலைப்​பளு ​கொண்​ட​தாகவும்​ ​மாற்​றக்​கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here