வந்தே மாதரம் பாடல்: ஆர்எஸ்எஸ், பாஜக மீது கார்கே குற்றச்சாட்டு

0
10

காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது.

ஆர்​எஸ்​எஸ் அலு​வல​கத்​தில் சுமார் 52 ஆண்​டு​கள் தேசிய கொடி​யும் ஏற்​றப்​பட​வில்​லை. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்தை ஆர்​எஸ்​எஸ் வசை பாடியது. மகாத்மா காந்​தி, அம்​பேத்​கரின் உருவ பொம்​மை​களை அந்த அமைப்​பினர் எரித்​தனர். ஆனால் காங்​கிரஸ் கட்சி 1896-ம் ஆண்டு முதல் இன்​று​வரை ஒவ்​வொரு கூட்​டத்​தி​லும் வந்தே மாதரம் பாடலை​யும், தேசிய கீதத்​தை​யும் இசைத்து வரு​கிறது. தேசிய ஒற்​றுமையை போற்​றிப் பாது​காத்து வரு​கிறது. இவ்வாறு கார்கே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here