உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

0
10

உ.பி.​யில் பள்​ளி, கல்​லூரி​களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடு​வது கட்​டாய​மாக்​கப்​படும் என்று அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார்.

சர்​தார் வல்​லப​பாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்​டாட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக உ.பி.​யின் கோரக்​பூரில் தேசிய ஒற்​றுமை தின பேரணி நேற்று நடை​பெற்​றது. இதில் உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் பங்​கேற்று பேசி​ய​தாவது:

சர்​தார் வல்​லப​பாய் படேல், நமது விவாதங்​களின் ஒரு பகு​தி​யாக மாற வேண்​டும். உ.பி. முழு​வதும் உள்ள பள்​ளி, கல்​லூரி​கள் உள்​ளிட்ட கல்வி நிறு​வனங்​களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடு​வது கட்​டாய​மாக்​கப்​படும். இதன்​மூலம் உ.பி.​யில் உள்ள ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் பாரத மாதா மற்​றும் மாத்​ருபூமி மீதான மரி​யாதை உணர்வு அதி​கரிக்​கும்.

தேசிய ஒற்​றுமை மற்​றும் ஒரு​மைப்​பாட்டை பலவீனப்​படுத்​தும் காரணி​களை நாம் அடை​யாளம் காண வேண்​டும். எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் ஒரு​மைப்​பாட்​டுக்கு சவால் விடும் ஜின்​னாக்​கள் எவரும் உரு​வா​காத வகை​யில் அவர்​களை திறம்பட எதிர்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

கோரக்​பூர் கோரக்​நாத் கோயில் வளாகத்​தில் நடை​பெற்ற மக்​கள் தரிசனம் நிகழ்ச்​சி​யில் மக்​களின் குறை​களை ஆதித்​ய​நாத் கேட்டறிந்​தார். அப்​போது பெறப்பட்ட மனுக்​களுக்கு உரிய தீர்வு காண்​ப​தாக உறு​தி அளித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here