கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை அந்தோணியார் குருசடி பகுதியில் ஒரு சொகுசு வேனில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் உடன் நிற்பதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த இடத்திற்கு கொல்லங்கோடு எஸ்.ஐ வில்சன் தலைமையான போலீசார் நேற்று (நவம்பர் 6) மதியம் 12 மணியளவில் சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்கள் வேனை எடுத்துச் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், போலீசார் சொகுசு வேனை மண்ணெண்ணெயுடன் கைப்பற்றி கொல்லங்கோடு போலீஸ் நிலையம் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். குற்றவாளிகள் யாரும் கிடைக்காத நிலையில் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட பறக்கும் படையினரிடம் சொகுசு வேனை ஒப்படைத்தனர்.