‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டார் வெற்றிமாறன். அப்போது அவரிடம் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். தற்போது முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’. ‘விடுதலை’ படத்தின் 2 பாகம் மாற்றம், படப்பிடிப்பு உள்ளிட்ட தாமதத்தினால், ‘வாடிவாசல்’ தாமதமானது. தற்போது ‘வாடிவாசல்’ பணிகளைத்தான் முழுமையாக கவனித்து வருகிறார் வெற்றிமாறன். ஆனால் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ரெட்ரோ’ முடித்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிவரும் படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதற்குப் பிறகு வெங்கி அட்லுரி படத்தை முடித்துவிட்டே ‘வாடிவாசல்’ பணிகளில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. ‘வாடிவாசல்’ படத்தை தாணு தயாரிக்க, ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.














