பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்கிறார். இதை உன்னி முகுந்தன் பிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் இதில் நடிக்க இருக்கிறார். அவர் நடித்து வெளியான ‘மார்கோ’, அதிகமான வன்முறைக்காக விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆக்ஷன் படத்தில் இணைந்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள உன்னி முகுந்தன், “இயக்குநர் ஜோஷியுடன் இணைவது கனவு நனவாகும் செயல் மட்டுமல்ல, அது ஓர் உணர்வு. அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்த ஒவ்வொரு நடிகரும் அதை உணர முடியும். இந்தப் படம் எனக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
Latest article
தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....
அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...








