அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்: மத்திய இணையமைச்சர் புகழாரம்

0
12

அரசு சேவை​கள் கிராமங்​களைச் சென்​றடைவ​தில் கிராம அஞ்சல் ஊழியர்​கள் முக்​கிய பங்​காற்​று​வ​தாக மத்​திய இணை​யமைச்​சர் பெம்​ம​சானி சந்​திரசேகர் தெரி​வித்​தார்.

தமிழக அஞ்சல் துறை சார்​பில், கிராம அஞ்சல் ஊழியர்​கள் மாநாடு நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய தொலைத் தொடர்பு துறை இணை​யமைச்​சர் பெம்​ம​சானி சந்​திரசேகர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

தமிழக அஞ்சல் வட்​டத்​தில் சிறப்​பாக பணி​யாற்​றிய 10 சிறந்த கிராம அஞ்சல் ஊழியர்​களைப் பாராட்டி விருது வழங்கி கவுர​வித்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இதயத் துடிப்பு சமூகங்​களை இணைப்​ப​தி​லும், கடைசி நிலை வரை அரசு நிர்​வாகத்​தைக் கொண்டு செல்​வ​தி​லும் அஞ்சல் துறை பங்​காற்​றுகிறது.

கிராமப்​புற அஞ்சல் ஊழியர்​கள் கிராமப்​புற இந்​தி​யா​வின் இதயத் துடிப்​பாக திகழ்​கின்​றனர். அவர்​கள் நாடு முழு​வதும் உள்ள மக்​களுக்கு அரசு சேவை​களைக் கொண்டு செல்​கின்​றனர்.

கடிதங்​கள் முதல் பார்​சல்​கள் வரை​யும், அரசுத் திட்​டங்​கள் முதல் வங்​கிச் சேவை​கள் வரை​யும், ஆதார் முதல் பாஸ்​போர்ட் சேவை​கள் வரை​யும், கிராமங்​களை​யும், தெருக்​களை​யும், வீடு​களை​யும் அஞ்சல் ஊழியர்​கள் சென்​றடைகின்​றனர்.

கடும் வெயி​லிலும், கொட்​டும் மழை​யிலும், இந்த ஊழியர்​கள் நம்​பிக்​கை​யின் பால​மாக, கிராமப்​புறப் பகு​தி​களுக்கு சேவை செய்​கின்​றனர்.

பார்சல் வருவாய் வாய்ப்பு

இந்​திய அஞ்சல் துறை​யின் பார்​சல் வரு​வாய் தற்​போது ஆயிரம் கோடி ரூபாய்க்​கும் குறை​வாக உள்​ளது. அதே​நேரத்​தில், தனி​யார் கூரியர் நிறு​வனங்​கள் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி ஈட்​டு​கின்​றன.

இன்​றைய சரக்​குப் போக்​கு​வரத்​துச் சந்தை சுமார் 10 பில்​லியன் டாலர் (ரூ.90 ஆயிரம் கோடி) வாய்ப்​பைக் கொண்​டுள்​ளது. 2031-ம் ஆண்​டுக்​குள் இது 20 பில்​லியன் டால​ராக (ரூ,1.8 லட்​சம் கோடி) ஆக வளரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக்​கொள்​வ​தில் அஞ்சல் ஊழியர்​கள் தீவிர​மாகப் பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். தமிழக அஞ்சல் வட்​டம் ஒட்​டு மொத்த வரு​வா​யில் நாட்​டிலேயே 2-வது இடத்​தில் உள்​ளது.

இந்​திய அஞ்சல் துறை​யின் பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்த அஞ்சல் ஊழியர்​கள், அர்ப்​பணிப்​புடன் சேவை​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை தலை​வர் மரி​யம்மா தாமஸ், சென்னை நகர மண்​டலத் தலை​வர் ஜி.நட​ராஜன் உட்பட பலர் கலந்​து​கொண்​டனர். ஆயிரத்​துக்​கும்​ மேற்​பட்​ட ஊழியர்​கள்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here