மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு இணை அமைச்சர் எல். முருகன் இன்று குமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்தார்.
அங்கு இரவு தங்கிய அவர் இன்று. ( 22-ம் தேதி )காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 1: 30 – மணிக்கு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் செல்கிறார்.