மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் அமெரிக்கா பயணம்

0
32

அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த 3 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பின் பேரில், முக்கிய தாதுக்கள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் பிப்ரவரி 2 முதல் 5-ம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுக்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here