குளப்புறம் ஊராட்சி வண்டிக்காரவிளை பகுதியில் உள்ள ரேசன் கடையை பிரித்து உதயனூர்விளை பகுதியில் புதிய முழுநேர ரேசன் கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிதாக ரேசன் கடை அமைக்க ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ரேசன் கடைக்கு கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. புதிய கட்டிடத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில்குமார் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.