யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா – யுஏஇ இன்று மோதல்

0
14

யு-19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் இன்று (12-ம்தேதி) தொடங்​கு​கிறது. இதில் இந்​தியா உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்கப்பட்​டுள்​ளன. இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம்பெற்றுள்ளது.

இதே பிரி​வில் மலேசி​யா, பாகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. யு-19 இந்​திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் (யுஏஇ) மோதுகிறது. காலை 10.30 மணிக்கு நடை​பெறும் இந்த ஆட்​டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 சானல் நேரடி ஒளிபரப்பு செய்​கிறது.

இந்​திய அணி மும்பை மற்​றும் சிஎஸ்கே அணி​யின் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அவர் மீதும், இளம் அதிரடி பேட்​ஸ்​மே​னான வைபவ் சூர்​ய​வன்ஷி மீதும் அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. இவர்​கள் இரு​வரும் சையது முஸ்​டாக் அலி டி 20 தொடரில் ரன்​கள் வேட்​டை​யாடி இருந்​தனர்.

ஆயுஷ் மாத்ரே தொடர்ச்​சி​யாக இரு சதங்​களும், ஒரு அரை சதமும் அடித்​திருந்​தார். சூர்​ய​வன்​ஷி, மகா​ராஷ்டிரா அணிக்கு எதி​ராக சதம் விளாசி சாதனை படைத்​திருந்​தார். இவர்​கள் இருவருமே சீனியர் அளவி​லான போட்​டிகளில் அனைத்து வடிவங்களிலும் கூட்​டாக 9 சதங்​கள் அடித்​துள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here