நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுபுரை தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை, அனிஷ் என்பவரின் நண்பர்களான ஜெரின்ஜோஸ், ரமேஷ் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், ஜெரின்ஜோஸ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.














