ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் மேலும் இரு இந்திய கப்பல்கள்

0
25

ஈரான் போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கப்​பல்​களுக்கு ஈரான் கட்​டுப்​பாடு விதித்​தது. இதனால் நூற்​றுக்​கணக்​கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் காத்​துக் கிடக்​கின்​றன. இதனால் எரிபொருள் விநி​யோகத்​தில் தட்​டுப்​பாடு ஏற்பட்டது.

உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​தது. இந்​தியா ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​திய இந்​திய கப்பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி பெற்றன. இதனால் ஈரான் போர் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 8 எரிபொருள் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா வந்​துள்​ளன.

கடந்த 1-ம் தேதி ஜக் வசந்த் என்ற எல்​பிஜி கப்​பல் மும்பை வந்​தடைந்​தது. இந்​நிலை​யில் க்ரீன் ஆஷா, க்ரீன் சான்வி என்ற இரண்டு இந்​திய எல்​பிஜி டேங்​கர் கப்​பல்​கள் வளை​கு​டாவை கடந்து வந்து கொண்​டிருப்​ப​தாக கப்​பல் கண்காணிப்பு தரவு​கள் மூலம் தெரிய​வந்​துள்​ளது.

ஜக் விக்​ரம் என்ற மற்​றொரு கப்​பல் ஹார்​முஸ் ஜலசந்திக்கு மேற்கே காத்​துக் கிடக்​கிறது. இது​வும் விரை​வில் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா வரும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here