Home தேசிய செய்திகள் ஒடிசாவில் குண்டு தயாரித்தபோது வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் குண்டு தயாரித்தபோது வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

0

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி அமியா மாலிக், ஷாநவாஸின் தாய் மற்றும் மற்றொருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து காவல் துணை ஆணையர் (டிசிபி) ஜக்மோகன் மீனா கூறுகையில், “இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முக்கிய நபர் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்டவர். ஏதோ ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கில் அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் இருந்து வெடி மருந்து துகள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தீவிர விசாரணை நடைபெறுகிறது” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version