Home தேசிய செய்திகள் கேரளம்: 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கேரளம்: 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

0

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் (55) உணவகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று ஜெயபாலகிருஷ்ணனின் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவன் கொச்சியை சேர்ந்த நீதிபதியின் மகன் என்பதும், அந்த கார் நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது மற்றும் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செய்தி யாளர்களிடம் பேசிய ஜெயபாலகிருஷ்ணனின் மருமகள், “காவல் நிலையத்தில், சிறுவனை ஏன் கார் ஓட்ட அனுமதித்தார்கள் என்று நீதிபதியிடம் கேட்டபோது, அவர் என்னிடம் மரியாதையற்ற தொனியில் பேசினார். அவரது இந்த அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இந்த வழக்கை தீவிரமாக கொண்டு செல்வோம். மேலும், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்பதற்கு இந்த வழக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்,” எனக் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version