கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்கு ரயில்வே கேட் இருப்பதால் ரயில் செல்லும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.