சென்னை கடற்கரைகளில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

0
11

சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்​டாக அனுசரிக்​கப்​பட்​டது. அதை யொட்டி மெரினா மற்​றும் காசிமேடு கடற்​கரை பகு​தி​களில் சுனாமியால் உயி​ரிழந்​தோருக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள், மீனவ அமைப்​பு​கள், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர்.

திமுக மீனவரணி சார்​பில் அணி​யின் துணைத் தலை​வர் கே.பி.சங்​கர் தலை​மை​யில் திரு​வொற்​றியூர் கடலோரப் பகு​தி​யில் நடை​பெற்​ற நிகழ்ச்சியில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ஆ.ரா​சா, மாவட்​டச் செய​லா​ளர் சுதர்சனம் உள்​ளிட்​டோர் கடலில் மலர்தூவி அஞ்​சலி செலுத்​தினர். தொடர்ந்து நலத்​திட்ட உதவி​களை வழங்​கினர்.

அதி​முக சார்​பில் காசிமேடு மீன்​பிடி துறை​முகத்​தில் முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார், மீன்​பிடி படகில் கடலுக்​குள் சென்று பால் ஊற்​றி​யும், மலர்​தூ​வி​யும் அஞ்​சலி செலுத்​தி​னார். கட்​சி​யின் அமைப்பு செய​லா​ளர் ராயபுரம் மனோ உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், துணைத் தலை​வர் சொர்ணா சேது​ராமன் தலை​மை​யிலும், பாஜக சார்​பில் சீனி​வாசபுரம் கடற்​கரை​யில் மாநில துணைத் தலை​வர் குஷ்பு, மாநிலச் செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் உள்​ளிட்டோரும், அமமுக சார்​பில், துணைப்​பொதுச்​செய​லா​ளர் ஜி.செந்​தமிழன் தலை​மை​யிலும் பால் ஊற்​றி​யும், மலர்​தூ​வி​யும் அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here