Home தேசிய செய்திகள் கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

0

மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர்.

இது தொடர்​பாக கோகினூர் மஜும்​தார், ரிஜு தத்தா மற்​றும் கார்த்​திக் கோஸ் ஆகியோ​ருக்கு கட்​சித் தலைமை விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது. அவர்​கள் அளித்த விளக்​கம் திருப்தி அளிக்​காத​தா​லும், தொடர்ச்​சி​யாகக் கட்சி விதி​களுக்கு மாறாகச் செயல்​பட்​ட​தா​லும் அவர்​கள் மூவரும் கட்​சியி​லிருந்து சஸ்​பெண்ட் செய்யப்பட்டனர். கட்​சித் தலை​மை​யின் அணுகு ​முறை மற்​றும் தேர்​தல் வியூ​கங்​கள் தோல்​வியடைந்​த​தாக இந்த 3 பேரும் பகிரங்​க​மாகக் குற்​றம் சாட்​டினர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கூறுகை​யில், “கட்சியின் உள்​விவ​காரங்​கள் குறித்​துப் பொது ​வெளி​யில் பேசுவது ஒழுங்கு நடவடிக்கை மீறலாகும். கட்​சி​யின் கட்டுப்பாட்டைச் சீர்​குலைக்க முயல்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

தேர்​தல் தோல்விக்​குப் பிறகு திரிண​மூல் காங்​கிரஸில் உட்​கட்சி மோதல் தீவிரமடைந்​துள்ள நிலை​யில், செய்​தித் தொடர்​பாளர்​கள் மீதான இந்த நடவடிக்கை அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version