பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளைச் சிறையில் இருந்த செல்வராஜிக்கு (50) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், நேற்று முன்தினம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ்க்கு, சிறுநீரகத்தில் கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குரிய சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
            













