காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை

0
18

காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​திய, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி சிட்னி மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​தப் போட்​டி​யின்​போது ஃபீல்​டிங்​கில் ஈடு​பட்​டிருந்​தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்​போது ஆஸ்​திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்​னோக்கி ஓடிச் சென்று பிடித்​து, அலெக்ஸ் கேரியை அவுட்​டாக்​கி​னார் ஸ்ரேயஸ்.

பந்தை பிடித்த பின்​னர் அவர் நிலை தடு​மாறி மைதானத்​தில் கீழே விழுந்​தார்.இதையடுத்து அவர் தனது இடது விலா எலும்​பில் காயம் அடைந்​தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

ஸ்ரேயஸ் ஐயரின் காயம் தொடர்​பாக இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) செய்​திக்​குறிப்பை நேற்று வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது:

ஃபீல்​டிங்​கின்​போது பாய்ந்து சென்று கேட்ச் பிடித்த ஸ்ரேயஸ் ஐயரின் இடது விலா எலும்​பில் காயம் ஏற்​பட்​டுள்​ளது. அவரது காயம் குறித்த மதிப்​பீடு செய்​வதற்​காக தற்​போது அவர் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here