அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 23-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.