தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

0
18

சட்​டப்​பேரவை தேர்​தல் முன்​னேற்​பாடு​களை மேற்​கொள்​வது தொடர்​பாக தேர்​தல் அலு​வலர்​களுக்கு நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சென்னை மாவட்​டத்​துக்​குட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பணி​கள் தொடர்​பாக மண்டல அலு​வலர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் உள்​ளிட்ட அலு​வலர்​களுக்​கான பயிற்சி வகுப்பு ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் கற்​பகம் தலை​மை​யில் நடை​பெற்ற பயிற்சி வகுப்​பில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை வாக்​குப்​ப​திவு மையத்​துக்கு கொண்டு செல்​லுதல், வாக்​குப்​ப​திவு முடிந்​த​பின் வாக்கு எண்​ணிக்கை மையத்​துக்கு கொண்டு செல்​லுதல், வாக்​குப்​ப​தி​வின்​போது வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பழுது ஏற்​பட்​டால் அதற்கு மாற்று இயந்​திரங்​களை வழங்​குதல், இந்த பணி​களின் போது பூர்த்தி செய்ய வேண்​டிய படிவங்​கள், பாது​காப்பு நடவடிக்​கைகள் உள்​ளிட்ட பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

மேலும், தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தங்​கள் பகு​திக்​குட்​பட்ட வாக்​குச்​சாவடி மையங்​களில் குடிநீர், கழி​வறை வசதி, மின் வசதி, மாற்​றுத்​திற​னாளி​கள் வாக்​களிக்க ஏது​வாக சாய்​வுதளம் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் உள்​ளனவா என்​பதை களஆய்வு மேற்​கொண்​டு, தகவல் தெரிவிக்க அறி​வுறுத்​தப்​பட்​டது.

வாக்​குப்​ப​திவு மையங்​களில் செய்​யப்பட வேண்​டிய முன்​னேற்​பாட்​டுப் பணி​கள் குறித்​தும், சட்​டம் – ஒழுங்கு தொடர்​பாக மேற்​கொள்​ளப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்​தும், பதற்​ற​மான மற்​றும் மிக​வும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடி மையங்​களில் மேற்​கொள்​ளப்பட உள்ள பாது​காப்பு வசதி​கள் குறித்​தும் தொடர்​புடைய அலு​வலர்​கள் களஆய்வு மேற்​கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here