தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை!

0
11

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டனும் சிஎஸ்கே அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மு​மான எம்.எஸ்​.தோனியின் வீடு ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் உள்ள சிமாலியா பகு​தி​யில் அமைந்​துள்​ளது.

சமீபத்​தில் தோனி தனது வீட்​டின் அருகே அனு​ம​திக்​கப்​பட்ட வேகத்தை​விட கூடு​தல் வேகத்​தில் காரை ஓட்​டிச் சென்​றது காவல்​துறை​யின் தானி​யங்கி கேம​ரா​வில் பதிவாகி​யுள்​ளது.

இதனைத் தொடர்ந்​து, மோட்​டார் வாக​னச் சட்​டத்​தின் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக ராஞ்சி போக்​கு​வரத்து காவல் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

தோனி தற்​போது ஐபிஎல் தொடருக்​காக சென்​னை​யில் சிஎஸ்கே அணி வீரர்​களு​டன் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here