குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் – ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி வழியாக வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்படும். நெல்லை மார்க்கமாக வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலை வழியாக புத்தேரி ஆராட்டு ரோடு வழியாக வடசேரிக்கு செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
