அகதிகளின் வலியை பேசும் டூரிஸ்ட் ஃபேமிலி: சசிகுமார்

0
313

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்’ சென்னையில் நடந்தது.

நடிகர் சசிகுமார் கூறும்போது, “தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். அதற்கு, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி சார் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். அவரின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள்தான். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். தங்கள் உரிமைகள் மற்றும் அடையாளங்களுக்காகப் போராடும் அகதிகள் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளது.

‘அயோத்தி’ மற்றும் ‘நந்தனை’ப் போலவே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here