டிஎன்பிஎல் தொடர்: சேலம் – திருப்பூர் இன்று மோதல்

0
156

டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அபிஷேக் தலை​மையி​லான சேலம் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி இரண்​டிலும் வெற்றி கண்​டுள்​ளது.

இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. திருப்​பூர் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, தோல்​வியை பதிவு செய்​துள்​ளது. இதன் மூலம் 2 புள்​ளி​களு​டன் அந்த அணி 3-வது இடத்​தில் உள்​ளது.

திருப்​பூர் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சேப்​பாக் சூப்​பர் கில்​லீஸ் அணி​யிடம் தோல்வி கண்​டிருந்​தது. எனினும் இதில் இருந்து மீண்டு வந்து அடுத்த ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான திண்​டுக்​கல் அணிக்கு எதி​ராக 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

கருத்தைப் பதிவு செய்ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here