டிம் ஷெய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியில் 183 ரன் இலக்கை எட்டி நியூஸிலாந்து சாதனை

0
15

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தானை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நியூஸிலாந்து அணி.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்​பாஸ், இப்​ராகிம் ஸத்​ரன் ஜோடி நிதானமான தொடக்​கம் கொடுத்​தது.

6-வது ஓவரை வீசிய லாக்கி பெர்​குசன், தொடக்க ஜோடியை வெளி​யேற்​றி​னார். இப்​ராகிம் ஸத்​ரன் 12 பந்துகளில் 10 ரன்​களும், ரஹ்மனுல்லா குர்​பாஸ் 22 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​களும் எடுத்த நிலை​யில் லாக்கி பெர்​குசன் பந்​தில் ஆட்டமிழந்தனர். பவர்​பிளே​வில் ஆப்​கானிஸ்​தான் அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 44 ரன்​கள் எடுத்​தது. இதன் பின்னர் நடு​வரிசை​யில் குல்​பா​தின் நயீப் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

அவர், தனது 4-வது அரை சதத்தை 29 பந்​துகளில் விளாசினார். மட்​டையை சுழற்​றிய குல்​பா​தின் நயீப் 35 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசிய நிலை​யில் ரச்​சின் ரவீந்​திரா பந்​தில் ஆட்டமிழந்தார்.

செடிக்​குல்லா அடல் 24 பந்​துகளில், 29 ரன்​களும் டார்விஷ்ரசூலி 13 பந்​துகளில் 20 ரன்​களும், அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 7 பந்​துகளில், 14 ரன்​களும், முகமது நபி 7 பந்துகளில், 10 ரன்​களும் சேர்க்க 20 ஓவர்​களில் ஆப்கானிஸ்​தான் அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்கள் குவித்​தது.

நியூஸிலாந்து அணி சார்​பில் லாக்கி பெர்​குசன் 2 விக்கெட்கள் வீழ்த்​தி​னார். மெட் ஹென்​றி, ஜேக்​கப் டஃபி, ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்​கள் இலக்​குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்​தது. ஃபசல்​ஹக் ஃபரூக்கி வீசிய முதல் ஓவரில் டிம் ஷெய்​பர்ட் 3 பவுண்​டரி​களை விரட்​டி​னார். ஆனால் முஜீப் உர் ரஹ்​மான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்​துகளில் ஃபின் ஆலன் (1), ரச்​சின் ரவீந்​திரா (0) ஆகியோர் ஆட்​ட​மிழந்​தனர்.

14 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய கிளென் பிலிப்​ஸ், டிம் ஷெய்​பர்ட்​டுடன் இணைந்து ஆப்​கானிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்துவீச்சை பதம் பார்த்​தார். அதிரடி​யாக விளை​யாடிய கிளென் பிலிப்ஸ் 25 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் விளாசிய நிலை​யில் ரஷித் கான் பந்​தில் போல்டானார். 3-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 74 ரன்​கள் சேர்த்​தது.

தனது 14-வது அரை சதத்தை கடந்த டிம் ஷெய்​பர்ட் 42 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது நபி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய மார்க் சாப்​மேன் 17 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலை​யில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்​தில் ஆட்டமிழந்​தார்.

16 ஓவர்​களில் நியூஸிலாந்து அணி 5 விக்​கெட்​கள் இழப்புக்கு 155 ரன்​கள் எடுத்​தது. இதன் பின்​னர் மிட்​செல் சாண்ட்​னர் 8 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் டேரில் மிட்​செல் 14 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 25 ரன்​களும் விளாச நியூஸிலாந்து அணி 17.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 183 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

ஆப்​கானிஸ்​தான் அணி தரப்​பில் முஜீப் உர் ரஹ்​மான் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 13 பந்​துகளை மீதம் வைத்து 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முழு​மை​யாக 2 புள்​ளி​களை பெற்​றது.

நியூஸிலாந்து அணி டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் 170 ரன்​களுக்கு மேலான இலக்கை வெற்​றிகர​மாக இதற்கு முன்​னர் துரத்​தி​யது இல்​லை. கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக 167 ரன்​கள் இலக்கை துரத்தி வெற்றி கண்​டிருந்​தது அதி​கபட்​ச​மாகும். தற்​போது முதன் முறையாக 183 ரன்​கள் இலக்கை அடைந்து சாதனை படைத்​துள்​ளது.

2 ஆயிரம் ரன்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் டிம் ஷெய்பர்ட் 65 ரன்கள் விளாசினார். அவர், 47 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச டி 20 அரங்கில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் 2 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை அவர், பெற்றார்.

இந்த மைல் கல்லை எட்ட அவர் 1395 பந்துகளை எடுத்துக்கொண்டார், இது ஐசிசி-யின் முழு உறுப்பினர் நாட்டைச் சேர்ந்த பேட்ஸ்மேனின் ஐந்தாவது அதிவேக சாதனையாகும். இந்த வகை சாதனையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர், 1,164 பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார்.

‘சுழல் எடு​பட​வில்​லை’

சேப்​பாக்​கம் ஆடு​களம் எப்​போதுமே சுழற்​பந்து வீச்சு ஓரளவு கைகொடுக்​கும். ஆனால் நேற்​றைய போட்​டி​யில் பந்​துகள் பெரிய அளவில் திரும்​ப​வில்​லை. ஆப்​கானிஸ்​தான் அணி​யில் முஜீப் உர் ரஹ்​மான், ரஷித் கான் ஆகியோர் தலா 4 ஓவர்​களை வீசி 67 ரன்​களை தாரை வார்த்​தனர்.

முகமது நபி ஒரு ஓவரை வீசிய நிலை​யில் 18 ரன்​களை விட்டுக்​கொடுத்​தார். ஒட்​டுமொத்​த​மாக சுழலில் வீசப்​பட்ட 9 ஓவர்​களில் நியூஸிலாந்து 85 ரன்​களை வேட்​டை​யாடியது. அதேவேளை​யில் நியூஸிலாந்து அணி​யின் சுழற்​பந்து வீச்சாளர்​கள் ஒட்​டுமொத்​த​மாக 6 ஓவர்​களை வீசி 49 ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்​தனர்.

3-வது இடத்​தில் பிலிப்ஸ்

டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நியூஸிலாந்​தின் கிளென் பிலிப்ஸ் 42 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழந்​தார். இதன் மூலம் சர்​வ​தேச டி20 போட்​டிகளில் நியூஸிலாந்து அணிக்​காக அதிக ரன்​கள் குவித்த வீரர்​களின் பட்​டியலில் முன்​னாள் கேப்​டன் பிரண்​டன் மெக்​கலமை பின்​னுக்​குதள்ளி 3-வது பிடித்​தார் கிளென் பிலிப்​ஸ்.

29 வயதான கிளென் பிலிப்ஸ் 89 டி 20 போட்​டிகளில் விளையாடி 2,147 ரன்​கள் சேர்த்​துள்​ளார். இந்த வகை​யில் மார்ட்​டின் கப்​தில் 3,531 ரன்​களு​டன் முதலிடத்​தி​லும், கேன் வில்​லி​யம்​சன் 2,575 ரன்​களு​டன் 2-வது இடத்​தி​லும் உள்ளனர்.

180-ல் முதல் தோல்வி

சர்​வ​தேச டி20 அரங்​கில் ஆப்​கானிஸ்​தான் அணி 180 ரன்​களுக்கு மேல் குவித்த ஆட்​டங்​களில் தற்​போது​தான் முதன்​முறை​யாக தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இதற்கு முன்​னர் அந்த அணி 180 ரன்​களுக்​கு மேல்​ குவித்​த 25 ஆட்​டங்​களில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here