திருவட்டாறு அருகே, ஏசி மெக்கானிக் ராஜேஷ் குமார் (32) என்பவர், ஒரு வீட்டில் ஏசி பழுது பார்க்க சென்றபோது, 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியான சைகை காட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி தனது பாட்டியிடம் கூறியதை அடுத்து, திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி, ராஜேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.
