திருவட்டாரில் பிரதி பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. நேற்று இந்த கோவிலுக்கு மத்திய அமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி சாமி தரிசனம் செய்ய வந்தார். ஒற்றைக்கால் மண்டபத்தில் ஆதி கேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி விக்ரகங்களுக்கு நடந்த அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி நிருபர்களிடம் கூறுகையில்: – கோவில் கருவறை மண்டபத்தை சுற்றியுள்ள பச்சிலை ஓவியங்கள் முழுமை பெறாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. தற்போது கோவில் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த ஓவியங்களை முழுமையாக வரைவது தொடர்பாக கோரிக்கை விடுத்தால் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.














