தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனராக அலுவலகத்திலிருந்து வந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது: – தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு அலுவல் சாரா பழங்குடியினர் 14 பேர், அலுவல் சாரா பழங்குடியினர் அல்லாத மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய ஆய்வுக் கூட்டம் மற்றும் ஆன்றோர் மன்ற ஆய்வுக் கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்கள் தேனி வீரலட்சுமி, கன்னியாகுமரி புஷ்பலீலா ஆல்பன், மதுரை தெய்வம், சேலம் சித்ரா, கோவை ரத்தினசாமி உள்ளிட்டோருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. குமரியில் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பனுக்கு குமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். புஷ்பலீலா ஆல்பன் திருவட்டாறு சட்டமன்ற தொகுதியாக இருந்த போது, அதில் திமுக எம்எல்ஏவாக இருந்தார்.
            













