திருவட்டாறு:   ஆதிகேசவன் கோயில் நகைகள்நீ.. நீதிபதி ஆய்வு

0
171

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் கடந்த 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவில் நகைகள் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.   திருடப்பட்ட நகைகள்  போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது.
      இந்த நிலையில் கோவில் நகைகள் மற்றும் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று திருவட்டாரை சேர்ந்த தங்கப்பன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நகை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் எஸ் ராமநாதன் என்பவரை  நியமித்தது.
      நீதிபதி ராமநாதன் நேற்று (9ஆம் தேதி) திருவட்டாறு வந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து விக்கிரகங்கள், நகைகள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்த வெள்ளி பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
      இந்த ஆய்வின் போது நீதிபதியின் செயலாளர் கந்தசாமி, சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கோவில்களின் ஆணையாளர (பொறுப்பு) ஜான்சிராணி, சிவகங்கை மண்டல துணை ஆணையாளர் சங்கர், அறநிலை துறையின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சத்திய சிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு இன்று(10-ம் தேதி)  2-ம் நாளாக நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here