திருவட்டாறில் இருந்து நேற்று மாலை மாத்தூரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்கில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை. பைக் முழுமையாக சேதமடைந்தது. திருவட்டாறு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
