Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டார்: சேதமடைந்த பாலம் தற்காலிக சீரமைப்பு

திருவட்டார்: சேதமடைந்த பாலம் தற்காலிக சீரமைப்பு

0

திருவட்டார் அருகே அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பாலத்தில் நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் சேதமடைந்த தகடின் ஓட்டையில் கால் முழுவதும் உள்ளே சென்றது. அதுபோல் 17-11-2024 அன்று இந்த பாலத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுவன் இந்த ஓட்டையின் உள்ளே கால் சென்று உடல் முழுவதும் உள்ளே சென்று தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். பொதுமக்கள் உதவியால் உடனே அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான். இதுசம்பந்தமான செய்தி நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிலையில் நேற்று (20-ம் தேதி) அவசரமாக பாலம் ஓட்டைகளில் தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version