திருவட்டாறு அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் சஜி (31) பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தேமானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வக்கீல். சஜிக்கும் ராஜேஷுக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 12) இரவு சுமார் 8 மணி அளவில் சஜி ஆற்றூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ராஜேஷ் திடீரென அங்கு சென்று தகராறு செய்துள்ளார். தனக்கு தரவேண்டிய பணத்தை உடனே தந்து விடுமாறு கூறி மிரட்டியதோடு சஜியை சரமாரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் சஜியை குத்தியுள்ளார்.
இதை அடுத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு ராஜேஷ் சென்றுவிட்டார். இதை அடுத்து சஜி ஆற்றூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.