திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயா (42). இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகை அடமான நிறுவனத்தில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார். நேற்று நகையை மீட்க சென்ற போது அங்கிருந்த மன்சூர் அலி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஜெயாவை ஜாதி பேர் சொல்லி திட்டியதுடன் மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து ஜெயா தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மன்சூரலி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.