“ரோஹித், கோலியை போன்று சஞ்சு சாம்சனுக்​கு மாற்று வீரர் இல்லை” – ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மனம் திறப்பு

0
19

சஞ்சு சாம்​சன் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்​குச் சென்​ற​தால் ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை யாராலும் நிரப்ப முடி​யாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்​குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்​பது, இந்​திய அணி​யில் ரோஹித் சர்​மா, விராட் கோலி போன்ற ஜாம்​ப​வான்​களுக்​குப் பதிலாக மாற்று வீரர்​களைத் தேடு​வது எவ்​வளவு கடின​மானதோ, அதே அளவு சாத்​தி​யமற்​றது என ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியின் கேப்​டன் ரியான் பராக் தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் கேப்​ட​னாக செயல்​பட்ட அதிரடி விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான சஞ்சு சாம்​சன், இந்த சீசனில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்​காக விளையாட உள்​ளார். சுவாரசி​ய​மாக இம்​முறை சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் 30-ம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்​கொள்​கிறது. இந்த ஆட்​டம் குவாஹாட்​டி​யில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் நேற்று ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற பத்திரிகையாளர்​கள் சந்​திப்​பின் போது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் கூறிய​தாவது: சஞ்சு சாம்​சனை பற்​றிச் சொல்ல வேண்​டுமென்​றால், அவருக்கு இணை​யான ஒரு மாற்று வீரரைப் பற்றி நாங்கள் ஒரு​போதும் சிந்​திப்​ப​தில்​லை.

அவரைப் போன்ற அதே திறமை கொண்ட ஒரு​வரை நாம் தேடலாம் அல்​லது அவர் விளை​யாடிய அதே வரிசை​யில் வேறொரு​வரை விளை​யாட வைக்​கலாம். ஆனால், விராட் கோலி, ரோஹித் சர்​மாவுக்கு எப்​படி ஒரு மாற்று இல்லையோ, அதே​போல சஞ்சு சாம்​சனுக்​கும் மாற்று என்பது கிடை​யாது. ஏனெனில், அவர் சிறந்த வீரர்.

இந்த ஆண்டு சரி​யாகத் திட்​ட​மிட்டு ஆட்​டங்​களை வெற்றிகர​மாக முடிப்​ப​தில் அதிக கவனம் செலுத்​து​வோம். கடந்த சீசனில் எங்​களால் அதைச் சரி​யாகச் செய்ய முடியாமல் போனது. நாங்​கள் சரி​யாகத் திட்​ட​மிட வேண்டும். கடந்த ஆண்டு 5 முதல் 6 போட்​டிகளில் கடைசி ஓவரிலோ அல்​லது கடைசி பந்​திலோ நாங்​கள் தோல்வியடைந்​திருந்​தோம்.

அந்​தப் போட்​டிகளை வெற்​றி​யாக மாற்​றி​யிருந்​தாலோ அல்​லது ஆட்​டத்தை இன்​னும் சிறப்​பாகக் கணக்​கிட்டு விளை​யாடி​யிருந்​தாலோ எந்த கேள்வி​களும் எழுந்திருக்காது. ஏனெனில், அந்​தப் போட்​டிகளில் நாங்​கள் வெற்றி பெற்​றிருந்​தால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி இருப்​போம். ஒவ்​வொரு டி20 போட்​டி​யிலும், ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றக்​கூடிய 3 அல்​லது 4 முடிவு​களை எடுக்க வேண்​டியது இருக்​கும் என்று நான் நினைக்கிறேன். அந்​தச் சிறிய முடிவு​களை சரி​யான வியூ​கம் மற்றும் திட்​ட​மிடலுடன் எடுத்​தால், இந்த ஆண்டு எங்களுக்கு வித்​தி​யாச​மான​தாக அமை​யும்.

நான் 17 வயதில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு வந்​தேன். இது​வரை பல ஏற்ற இறக்​கங்​களை பார்த்​திருக்​கிறேன். உண்​மை​யைச் சொல்​லப்​போ​னால், ஏற்​றங்​களை விட இறக்​கங்​களையே அதி​கம் சந்​தித்​திருக்​கிறேன். ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் நிர்​வாகத்​துக்கு நன்றி தெரிவித்துக்​கொள்​கிறேன். அவர்​கள் எனக்கு உறு​துணை​யாக இருந்​ததுடன், ஒரு கிரிக்​கெட் வீர​ராக நான் யார்​ என்பதையும்​ சரி​யாக புரிந்​து​கொண்​டனர்​. இவ்​வாறு ரியான்​ பராக்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here