Home சினிமா செய்திகள் ‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்

0

‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

‘லியோ 2’ குறித்து ரத்னகுமார், “அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படம் தொடங்கப்பட்டாலும் ‘கைதி 2’ படத்துக்கு பின்பு தான் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ‘கைதி 2’ படமே இன்னும் தொடங்கப்படவில்லை. முதலில் ‘லியோ’ படத்தின் OST வெளியாகட்டும். பின்பு ‘லியோ 2’ குறித்து பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கவனித்து வருவதாகவும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version