Home சினிமா செய்திகள் ‘வேட்டுவம்’ விரிக்கும் உலகம்: பா.ரஞ்சித் விவரிப்பு

‘வேட்டுவம்’ விரிக்கும் உலகம்: பா.ரஞ்சித் விவரிப்பு

0

பேரழிவை மையமாகக் கொண்ட கதைக் களங்களில், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளையும் சாகசங்களையும் கலந்து, குழுக்களின் மோதலாக உருவாக்கப்படும் ஒரு பிரபலமான திரைப்பட வகை ‘அபோகலிப்டிக்’ (Apocalyptic) சினிமா.

இதற்கு ஹாலிவுட்டில் சிறந்த எடுத்துக்காட்டு ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோடு’ (Mad Max: Fury Road).

இந்த வகையைத் தனது ‘வேட்டுவம்’ படத்தின் மூலம் தமிழில் முயன்றுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அதற்கான அறிமுகக் காணொளி வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ‘வேட்டுவம்’ விரிக்கும் திரைவெளி குறித்துப் படம் உருவான கதையைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பா.இரஞ்சித். மூன்று காலக்கட்டங்களில் நடைபெறும் கதை.

மூன்று வெவ்வேறு குழுக்கள் அதிகாரத்துக்காக நிகழ்த்தும் அரசியல் போட்டி, மோதல்களை மையமாகக் கொண்ட களங்கள். ‘அபோகலிப்டிக்’ ஆக்‌ஷன் திரைப்படமாக ‘வேட்டுவம்’ உருவாகி இருக்கிறது.

இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஆர்யா, ‘லப்பர் பந்து’ தினேஷ், ஷபீர் கல்லரக்கல், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.

சிலம்பம், மால்கம் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை, அவற்றின் அடிமுறைகளில் பிழையறப் பயிற்சிப் பெற்ற பின்னரே படப்பிடிப்பைத் தொடங்கி முடித்திருக்கிறார்கள்.

சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்ட இப்படத்துக்கு திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அறிமுகக் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version