ஆலயக் கட்சியின் ’முதன்மை’ பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு தனது மாவட்டத்தில் யாருக்கெல்லாம் இந்த முறை சீட் என்பதைவிட யாருக்கெல்லம் சீட் தரக்கூடாது என்பதை தரமாக முடிவெடுத்து வைத்திருக்கிறாராம். ‘அரங்கத்து’ பார்ட்டிக்கும் அவருக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை. முகத்துக்கு நேராக வணக்கம் வைத்து முகஸ்துதி பாடும் ‘அரங்கத்து’ பார்ட்டி பொது இடங்களில் ‘முதன்மை’யை முரட்டுத்தனமாகப் போட்டுத் தாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
‘அரங்கத்து’ பார்ட்டிக்கு வலுவான சாதியப் பின்னணி இருப்பதால் அவரை சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கமுடியாத நிலையில் இருக்கிறாராம் ‘முதன்மை’. இருந்தாலும் தனக்கு இம்முறை இவர் இருக்கை கிடைக்க விடமாட்டார் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டுவிட்ட ‘அரங்கத்து’ பார்ட்டி, தனது குவாரி பிசினஸ் அமோகமாக நடக்கும் மூன்றெழுத்து ‘கானா’ ஊர் பக்கம் காரைத் திருப்பிவிட்டாராம்.
அங்கிருக்கும் தலைமைக்கு நெருக்கமான ‘பாட்டில்’ புள்ளியோடு நெருக்கமாகிவிட்ட ‘அரங்கத்து’ புள்ளி, “இவரென்ன என்னைய தடுக்குறது… எப்படியும் ‘பாட்டில்’ தலைவர் எனக்கு இந்த முறை கட்டாயம் சீட்டைக் கன்ஃபார்ம் பண்ணிடுவாரு” என்று கதைத்துக் கொண்டிருக்கிறாராம்.