திராவிட இயக்கத்தின் விதை நாடக மேடைகளில்தான் விதைக்கப்பட்டது: ப.சிதம்பரம் தகவல்

0
22

‘​திராவிட இயக்​கத்​தின் விதை நாடக மேடைகளில்​தான் விதைக்​கப்​பட்​டது’ என்று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் தெரி​வித்​தார். தமிழ் வளர்ச்​சிக் கழகம் சார்​பில் ‘நாடக​வியல் களஞ்​சி​யம்’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் எம்​.பி, சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று நூலை வெளி​யிட, திரைப்பட இயக்​குநர் சுரேஷ் ராஜகு​மாரி முதல் பிர​தி​யைப் பெற்​றுக் கொண்​டார்.

இந்த விழா​வில், தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் ம.ராசேந்​திரன், சென்னை பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொறுப்​பு) ரீட்டா ஜான், துணைவேந்​தர் பொறுப்​புக் குழு உறுப்​பினர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங், நூலாசிரியர் மு.​ராமசு​வாமி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​நிகழ்​வில், ப.சிதம்​பரம் பேசி​ய​தாவது: கடந்த 2008-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டு, 2011-ல் வரைவு நூல் வந்​து, பல்​வேறு திருத்​தங்​களுக்​குப் பிறகு இன்​றைக்கு ஒரு முழு​மை​யான நூலாக ‘நாடக​வியல் களஞ்​சி​யம்’ வெளிவந்​துள்​ளது. தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் நிதிச் சுமையை அரசின் ஒத்​துழைப்​போடு குறைத்​துள்​ளோம்.

இதற்​காக ரூ.2.15 கோடி நிதியை தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. மேலும், ரூ.1 கோடியை நன்​கொடை​யாக திரட்​டி, நூறு ஆண்​டு​கள் நிதிச்​சுமை​யின்றி கழகம் செயல்​படு​வதற்​கான பணி​களை மேற்​கொண்டு வரு​கிறோம்.

அதே​போல், அறிஞர்​கள் சந்​தித்து விவா​திப்​ப​தற்​கான ஒரு தளத்​தை​யும் நாம் உரு​வாக்க வேண்​டும். எல்​லோரும் அவ்​வப்​போது சந்​தித்து கருத்​துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்​டும். அப்​போது​தான் புதிய சிந்​தனை​கள் பிறக்​கும். எனக்கு நாடகங்​கள் மிக​வும் பிடிக்​கும். பல சிறந்த நடிகர்​களை உரு​வாக்​கியது நாடகம்​தான்.

அது​மட்​டுமின்றி, தமிழகத்​தின் அரசி​யலில் நாடகத் துறை​யின் பங்கு மிக​வும் முக்​கிய​மானது. திராவிட இயக்​கத்​தின் விதையே நாடக மேடைகளில்​தான் விதைக்​கப்​பட்​டது. அண்​ணா, கருணாநிதி ஆகியோர் நாடகங்​களை அரசி​யல் மாற்​றங்​களுக்கு திறம்​படப் பயன்​படுத்​தினர்.

இனி 3 மாதங்​களுக்கு ஒரு நூல் என பல்​வேறு நூல்​களை வெளி​யிட தமிழ் வளர்ச்​சிக் கழகம் திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே இன்​னும் பல பேர் எழுது​வதற்கு ஆர்​வத்​துடன் முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here