திமுக கூட்டணிக் கட்சிகளை இபிஎஸ் ‘இடிக்கும்’ ரகசியம்?

0
29

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது.

அ​தி​முக – பாஜக உடன்​படிக்கை ஏற்​படு​வதற்கு முன்பு திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் சில கட்​சிகளுக்​கு, அந்​தப் பக்​கம் அணி மாறி​விடலாமா என்ற சபல​மும் லேசு​பா​சாக இருந்​தது. அதனால் அந்​தக் கட்​சிகளும் அதி​முக-வை அட்​டாக் செய்​ய​வில்​லை; அதி​முக-​வும் அதில் சில கட்​சிகளை போற்​றிப் பாடியது.

இந்த நிலை​யில், அனை​வ​ரும் சந்​தேகப்​பட்​டது போலவே மீண்​டும் அதி​முக – பாஜக உறவு மலர்ந்​தது. இதனால், திமுக கூட்​டணிக் கட்​சிகள் மாற்று சிந்​தனையை மூட்​டைகட்டி வைத்​து​விட்​டு, பாஜக உடன் அதி​முக கூட்​டணி சேர்ந்​ததை விமர்​சிக்க ஆரம்​பித்​தன. அதே​போல் பழனி​சாமி​யும் திமுக கூட்​ட​ணிக் கட்​சிகளை காய்ச்சி எடுக்க ஆரம்​பித்​தார்.

முதலில் விசிக-வை வம்​புக்​கிழுத்த பழனி​சாமி, “விசிக-வை திமுக விழுங்​கி​விடும்” என்​றார். அதற்​கு, “எளிய மக்​களின் கட்​சி​யான விசிக-வை யாராலும் வீழ்த்​த​வும் முடி​யாது; விழுங்​க​வும் முடி​யாது” என்று பதிலடி கொடுத்​தார் திரு​மா.

அடுத்​து, காம்​ரேடு​களை கலாய்த்த பழனி​சாமி, “இந்​தத் தேர்​தலோடு கம்​யூனிஸ்ட் கட்​சிகள் காணா​மல் போய்​விடும்” என்​றார். இதற்கு பதில் சொன்ன சிபிஎம் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், “காணா​மல் போகப் போவது கம்​யூனிஸ்ட்​களா… அதி​முக-வா என்​பதை 2026 தேர்​தல் முடிவு​கள் சொல்லும்” என்​றார். அடுத்​த​தாக இப்​போது காங்​கிரஸ் அட்​டாக்​கில் வந்து நிற்​கி​றார் பழனி​சாமி.

ஆளும் கூட்​ட​ணியை விமர்​சிப்​பது தான் எதிர்க்​கட்​சி​களின் வேலையே என்​றாலும் பழனி​சாமி​யின் விமர்​சனங்​களுக்​குப் பின்​னால், ‘என்ன சொன்னாலும் அந்​தக் கூட்​டணி அப்​படியே இருக்​கிறதே’ என்ற ஆதங்​கமே மேலோங்கி இருப்​ப​தாகச் சொல்​லும் அரசி​யல் நோக்​கர்​கள், “மிகப்​பெரிய ஒரு கட்​சியை வழிநடத்​தும் தலை​வ​ருக்கு தனி மனித தாக்​குதல் நடத்​தும் அளவுக்கு வன்​மம் தேவை இல்​லை​யே” என்​கி​றார்​கள்.

பாஜக உடன் அதி​முக கூட்​டணி சேர்ந்​த​தில் திமுக-வுக்கு கோபம். அதே​போல் திமுக கூட்​டணி கட்​டுக்​கோப்​பாக இருப்​ப​தில் அதி​முக-வுக்​குக் கோபம். இப்​படித்​தான் போய்க்​கொண்​டிருக்​கிறது இன்​றைய தமிழக அரசி​யல் களம். இதில், தாங்​கள் அதி​முக உடன் இருப்​ப​தால் திமுக அணி​யில் இருக்​கும் எந்​தக் கட்​சி​யும் அதி​முக அணிக்கு வராது என்று தெரிந்​தும் பாஜக தலை​வர்​களும் திமுக-​வின் தோழமைக் கட்​சிகளை துவைத்​துத் தொங்க​விட்​டுக் கொண்​டிருக்கிறார்​கள். அது​வும் தமி​ழிசை சவுந்​தர​ராஜன், “திரு​மாவளவனை துணை முதல்​வ​ராக்க வேண்​டும்” என்று ‘அக்​கறைப்​படு​கி​றார்’. ஆக, இவர்​களின் ஏக்​க​மும் எதிர்​பார்ப்​பும் திமுக கூட்​டணி எப்​படி​யா​வது சிதைந்​து​விடாதா என்​ப​தாகவே இருக்​கிறது.

பாஜக உடன் மீண்​டும் கூட்​டணி சேர்ந்​தது​மே, “இன்​னொரு மிகப்​ பெரிய கட்சி அதி​முக கூட்​ட​ணி​யில் இணை​யப் போகிறது” என்று சஸ்​பென்ஸ் வைத்​தார் பழனி​சாமி. ஆனால், அப்​படி எந்​தக் கட்​சி​யும் எம்​ஜிஆர் மாளி​கைப் பக்​கம் எட்​டிப்​பார்க்​க​வில்​லை. அவர் சொன்ன அந்​தக் கட்சி தவெக-​வாக இருக்​குமோ என ஹாஷ்​யங்​கள் றெக்கை கட்​டிய நிலை​யில், விஜய்​யும் அதி​முக கூட்​ட​ணிக்​கான கதவு​களை அடைத்​துச் சாத்​தி​னார். இதனால், அதிமுக அணிக்கு போகலாமா என யோசித்​துக் கொண்​டிருந்த தேமு​தி​க-​வும் பாமக-​வும் இப்​போது என்ன அவசரம் என பதுங்​கி​விட்​டன.

இப்​படி பாஜக-வை தவிர அதி​முக முகா​முக்கு இதுவரைக்​கும் வேறெந்த கட்​சி​யும் வராத நிலை​யில், திமுக தனது கூட்​ட​ணியை கட்​டுக்​கோப்​பாக வைத்​திருப்​பதுடன், இன்​னும் சில கட்​சிகளை​யும் தங்​கள் பக்​கம் ஈர்க்க தந்​திரக் காய்​களை நகர்த்தி வரு​கிறது. இதையெல்​லாம் பார்த்​து​விட்​டுத்​தான், திமுக-வை விட்​டு​விட்டு திமுக கூட்​ட​ணிக் கட்​சிகளை விமர்​சித்து அந்​தக் கூட்​ட​ணிக்​குள் குண்டு வீசிப் பார்க்​கி​றார் பழனி​சாமி.

தனது விமர்​சனங்​களால் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகள் ரோஷப்​பட்டு கூட்​ட​ணியை விட்டு வெளி​யேறி​விடதா என்​பதே பழனி​சாமி​யின் எதிர்​பார்ப்​பு. ஆனால், அவர் தனக்​குப் பக்​கத்​தில் பாஜக-வை வைத்​துக்​கொண்டு பேசுவ​தால் திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் அவரது ஒவ்​வொரு விமர்சனத்​துக்​கும் பதிலடி கொடுத்து வரு​கின்​றன.

திமுக கூட்​ட​ணியை கலைப்​ப​தற்​கான விமர்​சனங்​கள் கைகொடுக்​காமல் போன​தால் அடுத்​த​தாக சமூக வலைதள பதிவு​கள் மூல​மாக, சும்மா இருக்கும் காங்​கிரஸை சுரண்​டி​விட ஆரம்​பித்​திருக்கிறார்​கள். ‘காங்​கிரஸ் கட்சி விஜய்​யுடன் கூட்​டணி வைத்​தால் அந்​தக் கூட்​டணி 175 தொகு​தி​களில் வெற்றி பெறும்’ என்று கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​திருப்​ப​தாக இப்​போது சமூக வலை​தளத்​தில் செய்​தி​களைப் பரப்​பு​கி​றார்​கள்.

அதற்​கேற்ப காங்​கிரஸ்​காரர்​களும், திமுக கூட்​ட​ணி​யில் எங்​களுக்கு மரி​யாதை இல்​லை, இம்​முறை கூடு​தல் சீட் கேட்​போம், அமைச்​சர​வை​யிலும் பங்கு வேண்​டும் என்​றெல்​லாம் பேச ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். பழனி​சாமி​யும் பாஜக-​வும் எதிர்​பார்​ப்​பதும் இதைத்​தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here