பிரசந்த் ஹெலிகாப்டரில் பறந்த குடியரசுத் தலைவர்

0
22

கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் முறையே சுகோய் 30 மற்​றும் ரபேல் போர் விமானங்​களில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பயணம் செய்​தது அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.

இந்நிலை​யில், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்​சால்​மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்​தடைந்த முர்மு உள்​நாட்​டிலேயே வடிவ​மைக்​கப்​பட்ட பிரசந்த் ஹெலி​காப்​டரில் குரூப் கேப்​டன் நயான் சாந்​திலால் பஹு​வாவுடன் பயணம் மேற்​கொண்​டார்.

சுமார் 25 நிமிட பயணத்​தின்​போது காடிசர் ஏரி மற்​றும் ஜெய்​சால்​மர் கோட்டை மீது ஹெலி​காப்​டரில் பறந்து சென்று பீரங்கி இருந்த இலக்கை நோக்கி தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

இந்த பயணம் குறித்து பார்​வை​யாளர் புத்தக குறிப்​பில் திர​வுபதி முர்மு எழுதும்​போது, ‘‘பிரசந்​தில் பறந்து சென்​றது எனக்கு சிறந்த அனுபவத்தை அளித்​தது. இந்​தப் பயணம் நாட்​டின் பாது​காப்பு திறன் மீது ஒரு புதிய பெரு​மையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதற்​காக இந்​திய விமானப் படை மற்​றும் ஜெய்​சால்​மர் வி​மானப் படை தளத்​தின் குழு​வுக்கு வாழ்த்​துகள்​” என்​று குறிப்​பிட்​டுள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here